வெளியானது #PrabhuDeva நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் டிரெய்லர்!

பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர்…

பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’.

இதனைத் தொடர்ந்து, நாயகனாக  ‘மூன் வாக்’ திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார்.  பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே, நடிகர் விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் நிலையில், ‘ஜாலியோ ஜிம்கானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.