“குடிக்கிறவங்கள மட்டும் குத்தம் சொல்லலாமா?” பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.  இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பைசன்,…

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. 

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பைசன், மலையாளத்தில் பாபா புகா, தண்டகாரண்யம் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 9 ஆவது படமாக ‘பாட்டல் ராதா’ உள்ளது.

தினகரன் சிவலிங்கம் இயக்கும் இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி மலையாள நடிகர்களான டொவினோ தாமஸ், பாசில் ஜோசப் , பார்வதி திருவொத்து, நிமிஷா சஜயன், ஸ்வேதா மேனன் போன்றோர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிலையில்  டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.