‘The G.O.A.T.’ பட ட்ரெய்லர் – யூடியூபில் #1onTrending

‘The G.O.A.T.’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் யூடியூபில் 3.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை…

‘The G.O.A.T.’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் யூடியூபில் 3.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும்

,TheGreatestofAllTime,VenkatPrabhu ,ThalapathyVijay ,Vijay ,Trailer ,ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரைய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆக. 17 வந்துவிடும் என இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த வகையில் ட்ரெய்லர் நேற்று (ஆக. 17)  மாலை 5 மணிக்கு வெளியானது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படியுங்கள் : “கலைஞர் நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது” – முதலமைச்சர் #MKStalin பேச்சு!

இந்நிலையில், ‘The G.O.A.T.’ திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் யூடியூபில் 3.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக லியோ திரைப்படம் ஒரு நாளில் 3.1 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.