‘ஜெயிலர்’ படத்தின் கதை லீக்?… இதுதான் படத்தின் கதையா?….

‘ஜெயிலர்’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர்…

‘ஜெயிலர்’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் நேற்று மாலை 6 மணிக்கு  வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது,   ‘ஜெயிலர்’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி கேங்ஸ்டர் ஒருவர் தனது கூட்டத்துடன் ஜெயிலில் இருந்து வெளியேற திட்டமிடுகிறார். அவர்களது திட்டத்துக்கு ஸ்டிரக்டான ஜெயிலர் தடையாக இருக்கிறார். சிறைச்சாலையில் ஜெயிலராக நடிக்கும் ரஜினிகாந்த், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை என்று சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.