அமெரிக்காவில் நடிகர் பிரபாஸ்; ஜூலை 21ஆம் தேதி வெளியாகும் “புராஜக்ட் கே” க்ளிம்ஸ் வீடியோ…

புராஜக்ட் கே க்ளிம்ஸ் விடியோவை வெளியிட  நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளார்.           இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில்…

புராஜக்ட் கே க்ளிம்ஸ் விடியோவை வெளியிட  நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளார்.          

இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தற்போதைய பான்-இந்திய ஸ்டாராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாகுபலி புகழ் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதையின் நாயகியாக தோன்றி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

‘புராஜெக்ட்-கே’ படத்தின் தலைப்பு ஜூலை 20 அன்று சர்வதேச அரங்கில் அதாவது சான் டீகோ காமிக்-கான் நிகழ்வில் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகி வரும் படம் என்பதால் படத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், இயக்குநர் நாக் அஸ்வின், தயாரிப்பாளர் அஷ்வினி தத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில், பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீஸர் வெளியான நிலையில் தற்போது ‘புராஜெக்ட்-கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் முழு உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், புராஜக்ட் கே க்ளிம்ஸ் விடியோவினை அமெரிக்காவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளார்.  ஜூலை 20ஆம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21ஆம் தேதி இந்தியாவிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.