கதைக்குள் கருத்து இருக்க வேண்டும்; திணிப்பதாக இருக்கக்கூடாது- இயக்குநர் கே.பாக்யராஜ்

கதைக்குள்ளேயே கருத்து இருக்க வேண்டும். திணிப்பதாக இருக்கக்கூடாது என அரியவன் பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷான் நடிக்கும் அரியவன் படத்தின் இசை மற்றும்…

கதைக்குள்ளேயே கருத்து இருக்க வேண்டும். திணிப்பதாக இருக்கக்கூடாது என அரியவன் பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷான் நடிக்கும் அரியவன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். இப்படத்தில் இஷான், ப்ரணாலி நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இதையும் படிக்கவும் : தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிஹரன் மற்றும் சித்ரா இணைந்து இப்படத்தில் பாடியுள்ளனர். இந்த பாடலை இந்த படத்திற்காக கேட்டனர். இயக்குனர் மித்ரன் ஜவஹர் என்று சொன்னவுடன் சம்மதித்து விட்டேன். இப்படமும் நல்ல படமாகவும் வெற்றிப்படமாகவும் அமையும் என கூறினார்.


நடிகர் இஷான் பேசுகையில், இப்படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. சமூக கருத்துள்ள படத்தில் நடித்தது கடவுளின் பரிசு தான். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டெயின்மென்ட் படம். சமூக கருத்தும் உள்ளது என கூறினார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் நல்ல இயக்குனர். ஹீரோவை சுத்தி நிறைய பெண்கள் நிற்கும்போதே தெரிகிறது. இது பெண்கள் விழிப்புணர்வு படம் என்று. இஷானின் கண்கள் உயிர்ப்புடன் இருக்கிறது‌. இப்போது எல்லாம் ஹீரோக்களுக்கு தாடி இருந்தால்தான் மரியாதை என்று ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது.

நான் பார்த்திபன், பாண்டியராஜன் எல்லாம் எதுவுமே கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்தவர்கள். வந்தபிறகு எல்லாமே கற்றுக் கொண்டோம். ஆரம்பத்தில் பல சோதனைகள் வரும். அதனை பின்னாளில் நினைத்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். கதைக்குள்ளேயே கருத்து இருக்க வேண்டும். திணிப்பதாக இருக்கக்கூடாது.

ஆக்ஷன் படங்கள் எல்லா மொழிகளிலும் வெற்றிப் படங்களாகத் தான் இருக்கும். எப்போதும் இத்தகைய படங்களுக்கு லைஃப் இருக்கும். புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.