தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் மின் இணைப்பு பெறுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட, காவலரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இளவரசன் என்பவர் கடைகள் கட்டி வரும் நிலையில், மின் இணைப்பிற்கு தடையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு பேரூராட்சியில் பணியாற்றும் நீர்த்தேக்க தொட்டி காவலர் வெங்கடாசலம் பணம் கேட்டதால், இளவரசன் லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு
தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ரசாயனம் கலந்த பணத்தை வெங்கடாசலத்திடம் அவர் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக காவலரை பிடித்தனர்.







