கன்னியாகுமரி கடற்கரையை சுத்தம் செய்த ‘கலப்பை மக்கள் இயக்கம்’

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், கடற்கரைப் பகுதியில்…

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தினமும் ஆயிரக்கணக்கான
சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், கடற்கரைப் பகுதியில் அதிக
அளவு குப்பைகள் சேருவதும் இயல்பாக உள்ளது.

இந்த குப்பைகள் பேரூராட்சி சார்பில் நீக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கொண்டு கடற்கரையை தூய்மை செய்வதும் வழக்கம். இந்நிலையில், கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் நாகர்கோவில் ஜூனியர்
சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பு இணைந்து, தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட இளம் சிறார்கள் கலந்து கொண்டு கடற்கரை பகுதியை
தூய்மை செய்தனர்.மேலும், சிறுவர்கள் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மை
செய்தது, அங்கு வந்திருந்த அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.