Redmi Note 12 4G கடந்த வாரம் ஐரோப்பாவில் அறிமுகமானது. இப்போது நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Redmi Note 12 4G பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 12 4G ஆனது இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு கட்டமைப்புகளில் – 6GB + 64GB ரூ.14,999க்கும் மற்றும் 64GB + 128GB ரூ.16,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லூனார் பிளாக், ஃப்ரோஸ்டட் ஐஸ் ப்ளூ மற்றும் சன்ரைஸ் கோல்ட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகின்றன.
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.1,000 தள்ளுபடி பெற தகுதியுடையவராக நிறுவனம் தெரிவித்துள்ளது. Mi.com, Amazon India, Mi Homes மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக இந்தியாவில் ஏப்ரல் 6 முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Redmi Note 12 4G ஆனது 6.67-இன்ச் பஞ்ச்-ஹோல் AMOLED FHD+ டிஸ்ப்ளே மற்றும் 2400 x 1080 பிக்சல்கள் மற்றும் 120Hz ரெப்பிரேஷ் ரேட்டை கொண்டுள்ளது. பேனல் 240Hz டச் சம்ப்ளிங் ஆகியவற்றுடன் வருகிறது. Qualcomm Snapdragon 685 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான MIUI 14ஐ இயக்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, இது 50MP சாம்சங் JN1 சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 13MP கேமரா உள்ளது. இது 33W வேகமான வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.







