12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’ திரைப்படம்!

விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தை சுந்தர்.சி எழுதி இயக்கியுள்ளார். இது ஒரு நகைச்சுவை திரைப்படம். நவம்பர் 2012ல் அறிவிக்கப்பட்ட இந்த…

விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தை சுந்தர்.சி எழுதி இயக்கியுள்ளார். இது ஒரு நகைச்சுவை திரைப்படம். நவம்பர் 2012ல் அறிவிக்கப்பட்ட இந்த படம் பல முறை தாமதமாகி இன்னும் வெளியாகாமல் உள்ளது.  இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளர். இவர்களை தவிர சந்தானம், வரலட்சுமி, சதிஷ் முதலானோர் நடித்துள்ளனர். நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னனி பாடகருமான விஜய் அண்டனி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதலில் இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூத் பிரபுவிடம் அணுகப்பட்டது. அவர் மறுத்த நிலையில் கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானியை அணுகினர். ஆனால் தேதிகள் கிடைக்காததால் படத்தில் கையெழுத்திட முடியவில்லை. பின்னர் கார்த்திகா நாயர் விஷாலின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஷால் தனது வாழ்க்கையில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிப்பதாக இருந்தது.

பின்னர் ஸ்கிரிப்ட் பெரிய மாற்றம் ஏற்பட்டதால், விஷால் ஒரு பாத்திரத்தில் மட்டுமே நடிப்பார் என்றும் கூடுதலாக ஒரு முன்னணி நடிகை சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. படத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் கார்த்திகா திட்டத்திலிருந்து விலகினார். அஞ்சலி அவருக்குப் பதிலாக படத்தில் நடித்தார். மேலும் இரண்டு முக்கிய பெண் வேடங்களில் ஒன்றில் நடிக்க தபசி பண்ணு அணுகப்பட்டதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இந்தப் படத்தில் இருந்து தபசி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் அதிகாரத்தை ருசிப்பதற்காக அரசியலில் அடியெடுத்து வைக்க விரும்பும் முன்னணி தொழிலதிபராக சோனு சூட் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா கேமியோவில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சந்தானம் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.