90’s கிட்ஸ்களின் அபிமான தொலைக்காட்சித் தொடரான சக்திமானை திரைப்படமாக தயாரிப்பதாக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
90களில் அதிகப்படியான குழந்தைகளால் ரசிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி தொடர் என்றால் அது சக்திமான்தான். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொலைக்காட்சித் தொடருக்கு குழந்தைகள், இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ரசிகர்களாக இருந்துள்ளனர்.
இன்றளவும் சக்திமான் என்றால் பலருக்கு சட்டென இந்த தொடரும், பார்த்த அனுபவங்களும் நினைவுக்கு வந்துவிடும். அப்படி அபரிமிதமான ரசிகர்களை கொண்ட இந்த தொடரை திரைப்படமாக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோனி பிக்சர்ஸ் நிறுவனம், “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் நடிகர் முகேஷ் கண்ணாவின் சக்திமான் தொடர், தற்போது படமாக உருவாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக இந்தியாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.








