வெளியானது ’ஆதிபுருஷ்’ திரைப்படம்; வசூலைக் குவிக்குமா? – லேட்டஸ்ட் அப்டேட்

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் ஷாருக்கான் நடித்த பதானின் முதல்நாள் வசூலை முறியடிக்கலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆதிபுருஷ் உலகம்…

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் ஷாருக்கான் நடித்த பதானின் முதல்நாள் வசூலை முறியடிக்கலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆதிபுருஷ் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அட்வான்ஸ் புக்கிங் துவங்கிய நிலையில், படம் ரூ.12 கோடி வியாபாரம் செய்தது. தேசிய திரையரங்கு சங்கிலியான PVR இந்தி சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது. மேலும் வர்த்தக ஆய்வாளர்கள் நாடு முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ஒரு பெரிய திறப்பை எதிர்பார்க்கின்றனர்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் கிரிஷ் ஜோஹர், அனைத்து மொழிகளையும் சேர்த்து படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடி என தெரிவித்துள்ளார். மேலும் முதல் நாள் முடிவில் வசூல் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும், ஷாருக்கான் நடித்த பதானின் முதல் நாள் வசூலை முறியடிக்கலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.