தான் கண்டக்டராக பணிபுரிந்த இடத்தில் ரஜினிகாந்த் அந்தநாள் ஞாபகங்களை நினைவு கூர்ந்த தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து,. “ரஜினி170” படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பேருந்து பணிமனையிலிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.







