தி லெஜண்ட் திரைப்படத்தை எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜே டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி, பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார், விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
சில முக்கிய காட்சிகள் உக்ரைனில் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படகுழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஞ்ஞானியாக சரவணன் நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்தை தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த நிலையில் எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியிடுகிறது. சரவணனை சந்திந்த எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உலக அளவில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
– தினேஷ் உதய்







