‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு பிரசார படம்; ஐஎப்எப்ஐ குழு தலைவர் விமர்சனம்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு பிரசார திரைப்படம் என இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழு தலைவர் நடாவ் லாபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார். கோவாவில் கடந்த 20ம் தேதி தொடங்கிய 53வது சர்வதேச திரைப்படி…

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு பிரசார திரைப்படம் என இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழு தலைவர் நடாவ் லாபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கோவாவில் கடந்த 20ம் தேதி தொடங்கிய 53வது சர்வதேச திரைப்படி விழா நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவை சேர்ந்த நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், வெறுப்புணர்வை தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சNadav Lapid வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியும், குழப்பத்தையும் கொடுத்தது.

இந்த திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும், அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டி பிரிவினருக்கு பொருத்தமற்ற ஒன்றாக தோன்றுகிறது. இந்த விழா விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் என்பதால் வெளிப்படையாக பேசுகிறேன், என்று கூறினார்.

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மார்ச் 11ம் தேதி அன்று வெளியானது.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் காஷ்மீரிலுள்ள பண்டிட்கள் தீவிரவாத அமைப்புகளால் எவ்வாறு சித்தரவதை அனுபவித்தார்கள். அவர்கள் ஏன் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் அதிகளவில் அங்கு கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விவரிப்பதாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை ஆதரிக்கும் விதமாக அரியானா மாநில அரசு இப்படத்திற்கு முழுமையான வரிச்சலுகையை வழங்கியது. மேலும் மத்திய பிரதேசத்தில் காவல் துறையினருக்கு இந்த திரைப்படத்தை பார்க்க ஒரு நாள் விடுமுறையும் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.