ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா GOAT திரைப்படத்தின் பாடல்கள்?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. –…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் ‘கோட்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கோட்’ திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில், விசில் போடு பாடலை விஜய்யே பாடியிருந்தார். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் பூர்த்தி செய்யாததால் இது வெளியானபோது தங்களின் அதிர்ச்சியை பதிவு செய்தனர்.

அதன்பின், ‘சின்னச் சின்ன கண்கள்’ பாடல் வெளியானது. இதையும் விஜய் பாடியிருந்தார். ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இப்பாடல் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் அழகாகப் பயன்படுத்தியிருந்தனர்.

இதையும் படியுங்கள் : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதில்!

ஆனால், திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’ஸ்பார்க்’ வெளியாகி கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. முக்கியமாக, யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும் இயக்குநரை தகாத வார்த்தைகளிலும் விஜய் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். சிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்ததாகத் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.