30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

சூப்பர் ஹீரோக்களின் ”தி ஃப்ளாஷ்”; ரசிகர்கள் உற்சாகம்!

DC காமிக்ஸின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான தி ஃப்ளாஷ் படம் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

DC காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ‘தி ஃப்ளாஷ்’. இதுவரை கார்ட்டூன் தொடர்களும், வெப் சிரீஸ்களும் அடிப்படையாக வைத்து மின்னல்வேகமும், காலத்தை மாற்றும் சக்தியும் கொண்ட இந்த கதாபாத்திரம் வெளியாகி வந்தது. இதனிடையே ரசிகர்கள் இந்த சூப்பர் ஹீரோவிற்கான தனி படத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் விளைவாக ‘ஜஸ்டிஸ் லீக்’ உள்ளிட்ட சில படங்களில் இந்த கதாபாத்திரம் தோன்றினாலும் முதன்முறையாக ‘தி ஃப்ளாஷ்’ என்ற படத்தை, ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியில் DC நிறுவனம் உருவாக்கியுள்ளது. DC காமிக்ஸில் உள்ள ஃப்ளாஷ் பாயிண்ட் கதைக்களத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் மிக பெரிய எதிர்பார்ப்பே இந்த படத்தில் வரும் பேட்மேன் கதாபாத்திரங்கள் தான். குறிப்பாக மைக்கேல் கீட்டன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பு. எஸ்ரா மில்லர் நாயகனா நடித்துள்ள இந்த திரைப்படம், DC எக்ஸ்டெண்டட் யுனிவர்ஸின் கடைசி ஃப்ளாஷ் படமாக இருக்கலாம் எனவும் இதில் கேமியோக்களாக வரும் சில நட்சத்திர நடிகர்களுக்கும் கடைசிப் படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சிறு வயதில் இருக்கும் போது இறந்து போன தனது தாயைக் காப்பாற்றச் செல்லும் நாயகன் கவனக்குறைவாக சில தவறுகள் செய்து தனது யுனிவர்ஸை குழப்பி விடுகிறார். இதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்த ஃப்ளாஷ் படம் உருவாகியிருப்பதாக டிரெய்லரை பார்க்கும் போது தெரிய வந்தது. இந்த டிரைலர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி DC ரசிகர்களுக்கு மட்டுமின்றி, உலக சினிமா விரும்பிகளுக்கும் விருந்தாக அமைந்தது.

ஜேம்ஸ் கன் DC ஸ்டுடியோவைக் கைப்பற்றியதால், முன்பு இருந்த DC காமிக்ஸில் படங்களின் தொடர்ச்சிகள் இந்த படத்துடன் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading