முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடக்கம் முதல் எதிர்ப்பு – பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை கோஷம் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில் அதிமுக பொதுக்குழுவிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலிருந்து வெளியேறினார்.

பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்திருந் நிலையில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் வருகையின்போது “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மண் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்குவது குறித்த தீர்மானம் நிவேற்றப்பட்ட நிலையில், இதை முன்மொழிய ஓபிஎஸ்-ம், வழிமொழிய இபிஎஸ்-ம் அழைக்கப்பட்டனர். இதனையேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். ஆனால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

இதனையடுத்து தீர்மானங்களை வைகைச்செல்வன் அறிவித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மைக்கை பிடித்து அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். அதேபோல கே.பி.முனுசாமி, ஒற்றைத் தலைமை வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகின்றனர். அந்த தீர்மானம் இல்லாத மற்ற தீர்மானங்களை இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என்றும், ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு நடைபெறும் என்றம் கூறினார்.

இதனையடுத்து அரங்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தது. ஓபிஎஸ்-க்கு எதிரான கோஷங்களும் வலுபெறத் தொடங்கின. இந்த கோஷங்கள “ஓபிஎஸ்-ஏ வெளியேறு” என பரினாமமடையத் தொடங்கின தொடங்கின. சூழல் நெருக்கடியாக மாறியதை உணர்ந்த ஓபிஎஸ கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும்போதே வெளியேறினார். அவருடன் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் வெளியேறினர்.

இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை!

Saravana

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

Ezhilarasan

நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

Halley Karthik