30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

மும்மதத்தினர் இணைந்து வெளியிட்ட ‘பாய் – Sleeper Cells’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத பிரமுகர்கள் இணைந்து “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

வழக்கமாக திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மத பிரமுகர்களை இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே தொரட்டி, தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள, தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்தவர். எடிட்டிங் இத்ரிஸ்.படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது, “பாய் – Sleeper Cells” திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாயகன் ஆதவா ஈஸ்வரா இந்த படத்திற்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து கதாப்பாத்திரத்த உணர்ந்து நல்லா பண்ணிருக்காரு.

திரைப்படத்திற்கான Indoor Location 2 Set போட்ருக்கோம், Outdoor Location அனைத்தும் Live – ஆக படமாக்காப்பாட்டது அது தான் படத்திற்கும் தேவைபட்டது, மிகவும் சவாலாக இருந்தது. 23 நாட்களில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. PVR பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட வந்தது எங்களுக்குக் கிடைத்த பெரிய நம்பிக்கை. தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

யாரை வைத்து இதன் போஸ்டர்களை வெளியிடுவது என்று யோசித்தோம். வழக்கமாகச் சினிமா சம்பந்தப்பட்டவர்களை வைத்து வெளியிட்டால் சாதாரணமாகவே தெரியும். பெரிய கவனம் பெறாது என்று நினைத்தோம். அதனால் படத்தில் சொல்லப்படும் கருத்தின் வாயிலாகவே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். எனவே மூன்று வெவ்வேறு மத பிரமுகர்களை வைத்து இதை வெளியிட முயற்சி செய்தோம்.அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்படி இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான முகமது அபுபக்கர், அப்போஸ்தல சர்ச் ஆப் இந்தியா பிஷப் டாக்டர் எஸ். எம். ஜெயக்குமார் என மூன்று மதத் தலைவர்களையும் வைத்து வெளியிட்டோம் .

பொதுவாக ஒருவர் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி .எஸ் .ஆர். சுபாஷ் அவர்களையும் இணைத்து நான்கு பேரை வைத்து இந்தப் படத்தின் போஸ்டரை ஒரு முதியோர் இல்லத்தில் வெளியிட்டோம். “பாய்- ஸ்லீப்பர் செல்ஸ்” திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது. இவ்வாறு இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading