காஷ்மீரில் #Amaran படம் உருவான விதம்… சந்தித்த பிரச்னைகள் குறித்து படக்குழு வீடியோ வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் மேக்கிங் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் மேக்கிங் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. படத்தின் சிறப்பு காட்சி இந்திய ராணுவ வீரர்களுக்கு திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால் படத்தை பாதியிலேயே நிறுத்தியதாக படக்குழு தெரிவித்துள்ளது. பின்னர் மீண்டும் ஜி20 மாநாடு முடிந்த பின்பு படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.