ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்த படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்தது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’  திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.…

நடிகர் ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்தது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’  திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள் :சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!

இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.  மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்தது.

https://twitter.com/LycaProductions/status/1746740270681497937

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.