சுமோடோவில் கெட்டுப் போன மஸ்ரூம் கிரேவியை அனுப்பிய பிரபல உணவகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அன்னை சாந்தி
என்ற பிரபல உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த விஷ்ணு
என்பவர் zomato வில் 209 ரூபாய்க்கு மஸ்ரூம் பிரியாணி மஸ்ரூம் கிரேவி ஆர்டர்
செய்தார். உணவகம் நிர்வாகம் கெட்டுப்போன மஸ்ரூம் கிரேவியை அவருக்கு அனுப்பி
வைத்துள்ளனர். வீட்டில் மஸ்ரூம் கிரேவியை பிரித்து பார்த்த பொழுது கெட்டுப்
போயிருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து விஷ்ணு தொலைப்பேசியில் அழைத்து உணவகம்
உரிமையாளரிடம் கேட்ட பொழுது உன்னால் முடிந்ததைச் செய்து கொள் என்று கூறியதை
தொடர்ந்து, நேராக அன்னை சாந்தி உணவகத்திற்குக் கெட்டுப்போன கிரேவியை எடுத்து வந்த
விஷ்ணு அங்கு இருந்தவர்களிடம் மஸ்ரூம் கிரேவியை காண்பித்துப் பரிசோதிக்கச்
சொன்னார். அங்கு இருந்தவர்களும் கெட்டு விட்டது என்று கூறினார்.
அதனை தொடர்ந்து உணவகத்தில் உரிமையாளர் இல்லாததால் அங்கிருந்த மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்பு செய்தியாளர்கள் செய்தி எடுப்பதைப் பார்த்த உணவகம் மேலாளர் விஷ்ணுவுக்குப் பணத்தை G PAY மூலம் திருப்பி அனுப்பினார். இது போல்
இனிமேல் நடக்காது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.







