“காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது” – ‘#Thandakaaranyam’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த படக்குழு!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ்…

The crew of '#Thandakaaranyam' gave a first look update!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டூடியோ மற்றும் லேர்ன் அன்ட் டீச் புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை (செப்.27) மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.