ஊழலில் பெரிய கட்சி எது என்பதே போட்டி: நடிகர் டி.ராஜேந்தர்

ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பது தான் தற்போதைய போட்டி என இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்  தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று…

ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பது தான் தற்போதைய போட்டி என இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் தன் வாக்கினை பதிவு செய்தார்.

பின் செய்தியாளர்களை பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் நிற்பவர்களில் சரியானவர்களை தேர்ந்தெடுத்தால் தான் மக்கள் பணி நடக்கும். ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பது தான் தற்போதைய போட்டியாக இருக்கிறது. எந்த கட்சியிலும் பேச்சாளர்களுக்கு இடமல்லாமல் போய்விட்டது.

கார்ப்பரேசன் அரசியல் அந்தகாலம், கார்பரேட் அரசியல் இந்த காலம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எந்த கட்சிக்கும் எங்கும் அலை வீசவில்லை என்பதே இன்றைய நிலை.

ஓட்டு போடுவது டாஸ்க். திரையரங்குகள் திறக்கும் போது மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி கேட்டார்கள் இப்போது ஏன் கேட்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்கு மட்டும் ஒரு சட்டமா என விமர்சித்தார்.

மேலும், சிலர் ஜனநாயகத்திற்கும், சிலர் பண நாயகத்திற்கு ஓட்டு போடுகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவா? காங்கிரஸா? என்பது தான் முக்கிய போட்டியாக இருக்கிறது. சிம்பு படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறார். . வேறு எந்த காரணங்கள் இருந்தாலும் அவர் வாக்களித்து விடுவார். அதே நேரத்தில் சூழ்நிலை சரியாக இருந்திருந்தால் அஜித்குமார் வாக்களித்திருப்பார் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.