நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் ரூ 500 கோடியை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்து.
இந்நிலையில், இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் மொத்தம் 11 நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







