மீண்டும் அண்ணன் தயாரிப்பில் தம்பி?… கார்த்தி – சூர்யா கூட்டணியில் புதிய படம் – லேட்டஸ்ட் அப்டேட் !

  நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கார்த்தியின் அடுத்தப் படமாக ‘ஜப்பான்’ வெளியாக உள்ளது. இந்நிலையில்,…

 

நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கார்த்தியின் அடுத்தப் படமாக ‘ஜப்பான்’ வெளியாக உள்ளது. இந்நிலையில், அவரது அடுத்தப் படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், 96 திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரவீன் குமாரின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://twitter.com/pcsreeram/status/1684156436631404545?s=20

கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ள இந்தப் படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் தயாரிப்புத் தரப்பு இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.