#Thalapathy69 : ‘One Last Time’ – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!

நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கான அறிவிப்பு தேதி குறித்து படக்குழு வீடியோ வெளியிட்டு அப்டேட் வழங்கியுள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம்…

#Thalapathy69 : 'One Last Time' released by the production company

நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கான அறிவிப்பு தேதி குறித்து படக்குழு வீடியோ வெளியிட்டு அப்டேட் வழங்கியுள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. அந்த திரைப்படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாட்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசித் திரைப்படம் குறித்த அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு சமர்ப்பணமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நாளை மாலை 5 மணிக்கு திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலுக்கு எழுதிய கதையைதான் விஜய்க்கு எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (செப். 14) மாலை 5 மணிக்கு வெளியாகும். கடைசி திரைப்படம் என்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : #AnnapurnaHotel விவகாரம் : நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், தனது 69-ஆவது திரைப்படமே கடைசிப் படமாக இருக்கும் என்று முன்னரே அறிவித்திருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.