‘தை தக்க கல்யாணம்’ | #Madraskaaran படத்தின் முதல் பாடல் வெளியானது!

மெட்ராஸ்காரன் படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் பாடல் வெளியானது. மலையாள சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர்தான் ஷானே நிகாம். துல்கர் சல்மானின் டிராவல் திரைப்படமான நீலாகாசம்  பச்சக்கடல் சுவர்ணபூமி திரைப்படத்தின்…

'Thai Takka Kalyanam' #Madraskaaran's first song released!

மெட்ராஸ்காரன் படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் பாடல் வெளியானது.

மலையாள சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர்தான் ஷானே நிகாம். துல்கர் சல்மானின் டிராவல் திரைப்படமான நீலாகாசம்  பச்சக்கடல் சுவர்ணபூமி திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்கினார். கிஸ்மத் படத்தில் இவரது துள்ளலான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘இஷ்க்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, C/O சாய்ரா பானு,  ‘ஆர்டிஎக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஷேனே நிகாம் தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன். நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் திருமண வைபில் மிக ஜாலியான பாடலாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.