முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

7 வருடங்களுக்கு பிறகு பரவச நிலைக்கு போகும் DNA ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய காம்போக்களில் உச்சம் தொட்டவர்கள் என்றால் அனிருத்- தனுஷை சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் உருவான ஒவ்வொரு படத்தின் ஆல்பமும் இந்திய சினிமாவிலேயே புதியதொரு ட்ரெண்டை உருவாக்கியது. 3, வேலையில்லா பட்டதாரி, மாரி என தனுஷ் நடித்த படங்களாகட்டும் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தனுஷ் தயாரித்த படங்களாகட்டும் எல்லாமே இளைஞர்களின் நாடி நரம்புகளை எல்லாம் பதம் பார்த்த சூப்பர் ஹிட் ஆல்பங்கள். dhanush and anirudh கூட்டணியை DNA என பெயர் வைத்து கொண்டாடித் தீர்த்தனர் இணையவாசிகள்.

இந்நிலையில் தனுஷின் தங்க மகனுக்கு பிறகு இந்த கூட்டணி உடைந்தது. தன்னை அறிமுகப்படுத்திய தனுஷை விட சிவகார்த்திகேயன் படங்களில் தான் தனுஷ் அதிக கவனம் செலுத்தினார் போன்ற நிறைய காரணங்களால் தான் இருதரப்பிலும் மனக்கசப்பு உருவாகி பிரிந்துவிட்டார்கள் என நிறைய கதைகள் சொல்லப்பட்டாலும் இருவரும் பொதுவெளியில் பரஸ்பரம் மரியாதையுடனே பேசிக்கொண்டிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத்தொடர்ந்து வந்த தனுஷின் VIP -2 உள்ளிட்ட நிறைய படங்களில் அனிருத் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது. அனிருத் பாடல்களுமே தனுஷின் வரிகளையும், நடனங்களையும் மிஸ் செய்ததை உணரமுடிந்தது. இந்நிலையில் 7 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு இரண்டு கலைஞர்களுமே ஒன்றிணையும் படம் தான் திருச்சிற்றம்பலம்.7 வருடங்களுக்கு பிறகு DNA காம்போவில் ஒரு பாடல் வருகிறது. so இது ரொம்ப ஸ்பெஷல்’ என தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இப்படம் ஒரு மியூஸிகல் காமெடி டிராமா படம் என்பதால் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. ‘படத்துல ஒரு பாட்டு இருந்தாலே கொளுத்தி எடுத்துருவார் அனி, படமே பாட்ட வச்சித்தான்னு சொல்லும் போது மொரட்டு சம்பவமா இருக்கே!’ எனக்கூறி இந்த ஆல்பத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. வேலையில்லா பட்டதாரியின் ‘ ஊதுங்கடா சங்கு’ பாடலைப் போன்றதொரு கெட்டப்பில் நித்யா மேனனுடன் தனுஷ் குத்தாட்டம் போடுவது போல் அமைந்துள்ளது இந்த போஸ்டர். ஆக தாய் கிழவி பாடலால் தனுஷ் ரசிகர்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு பரவச நிலை காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி!

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

Ezhilarasan

சாதனை படைத்த திமுக; 30 ஆண்டுகள் கழித்து அயோத்தியா பட்டணத்தில் வெற்றி

Halley Karthik

டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Saravana Kumar