முக்கியச் செய்திகள் இந்தியா

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; 10 குழந்தைகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை குழந்தைகள் பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அறை முழுவதும் பரவிய இந்த தீயால் அங்கி சிகிச்சைப் பெற்று வந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பண்டாரா பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”

Janani

ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்

Arivazhagan Chinnasamy

6,915 ஆக குறைந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு

G SaravanaKumar

Leave a Reply