ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள மாணவர் விடுதி அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான தேஜஸ் இயக்கப் பயிற்சியின்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள மாணவர் விடுதி அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான தேஜஸ் இயக்கப் பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  விமானத்தில் இருந்த விமானி பத்திரமாக வெளியேறியுள்ளார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த சம்பவம் குறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் ஒன்று இன்று ஜெய்சால்மரில் செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.  விமானி பத்திரமாக வெளியேறினார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தில் பயிற்சி விமானம் ஹாக் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.  கலைகுண்டா விமானப்படை நிலையம் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில் உயிர் சேதமோ,  பொருட்சேதமோ ஏற்படவில்லை. விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.