சுஷ்மிதா சென் திருநங்கையாக நடித்த ‘தாலி’ வெப் தொடரின் டீசர்!

இயக்குநர் ரவி ஜாதவ் உருவாக்கத்தில் சுஷ்மிதா சென் நடித்துள்ள ‘தாலி’ வெப் தொடரின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து…

இயக்குநர் ரவி ஜாதவ் உருவாக்கத்தில் சுஷ்மிதா சென் நடித்துள்ள ‘தாலி’ வெப் தொடரின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ரசிகர்கள் மீண்டும் அவரை வெள்ளித்திரையில் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் வெப் சீரிஸ் மூலம் சுஷ்மிதா தனது ரசிகர்களின் ஏமாற்றத்தை நீக்கி வருகிறார். ‘ஆர்யா 3’ மற்றும் ‘தாலி’ வெப் தொடர் பற்றி அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக விவாதித்து வருகின்றனர்.

‘ஆர்யா’ தொடரின் மூன்றாவது சீசன் உருவாகி வரும் நிலையில், தற்போது ‘தாலி’ தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. ‘தாலி’ வெப் சீரிஸை ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். அர்ஜுன் சிங் பரன் மற்றும் கார்ட்க் நிஷாந்தர் ஆகியோரின் தயாரிப்பில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சுஷ்மிதா சென் ‘ஸ்ரீகௌரி சாவந்த்’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சமூக சேவகராகவும், திருநங்கையாகவும் வலுவான தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாலி தொடர் இந்தியாவின் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞரான ஸ்ரீகௌரி சாவந்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. ஸ்ரீகௌரி தனது அங்கீகாரம், சமத்துவம் மற்றும் அடையாளத்திற்கான தைரியமான தேடலை சித்தரிக்கும் விதமாக இந்த தொடர் அமைந்துள்ளது.

’தாலி’ தொடர் ஆகஸ்ட் 15 முதல் ஜியோசினிமா ஓடிடியில் ஒலிபரப்பாக உள்ளது. சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தொடரின் டீசரைப் பகிர்ந்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சுஸ்மிதாவின் ரசிகர்கள் தற்போது இந்த தொடரை பேசுபொருளாக்கி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=P8Ft34S-JIQ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.