தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தஞ்சை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் விசாணையைத் தொடங்கியது சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணையைத் தொடங்கியுள்னர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில்…

தஞ்சை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் விசாணையைத் தொடங்கியது சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணையைத் தொடங்கியுள்னர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி +2 படித்து வந்த 17 வயது மாணவி, விஷம் குடித்துஉயிரை மாய்த்துக் கொண்டார்.

மாணவியை மதம் மாற வற்புறுத்தியதும், கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியதும்தான் உயிரிழப்புக்கு காரணம் என பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தையும் உயிரிழப்புக்கு மதம் மாற்ற வற்புறுத்தல்தான் காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாணவி பயின்ற பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்னர். மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதிகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக மாணவிஉயிரிழப்பு விவகாரத்தில், மதமாற்ற நடவடிக்கை காரணம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தஞ்சை பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த விளக்கத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள் என்றும், அனைவருக்குமான சமய சார்பற்ற கல்வியை அளித்து வருவதாகவும், யாருடைய மத நம்பிக்கையிலும் குறுக்கிடுவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.