இறுதிக்கட்டத்தை எட்டிய தங்கலான் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள்…! – லேட்டஸ்ட் அப்டேட்…

தங்கலான் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.   விக்ரம்  நடித்துள்ள தங்கலான் படம் ஜனவரி மாதம்  வெளியாக இருந்த நிலையில் ஏப்ரம் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பா ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி, …

தங்கலான் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

விக்ரம்  நடித்துள்ள தங்கலான் படம் ஜனவரி மாதம்  வெளியாக இருந்த நிலையில் ஏப்ரம் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பா ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி,  மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  ஜி.வி பிரகாஷ் இசையும் கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

17-ஆம்  நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த மக்களின் போராட்ட கதையை ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் .  சரித்திர கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வாக காத்திருந்தார்கள்.  இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தங்கலான் படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திப்போனதன் காரணத்தை தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவேண்டும் என்று படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன் நிறைய வேலைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.  மேலும் இது ஒரு பெரிய படம் என்பதால் இந்தப் படம் எந்த படத்துடனும் இல்லாமல் தனியாக ஒரு ரிலீஸ் தேதி தேவைப்படுகிறது.  மேலும் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை விரைவில் படக்குழு தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தங்கலான் படத்தின் கதை யுனிவர்சலான கதை. இந்தப் படத்திற்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். மலேசியா , துபாய் , பீஹார், பஞ்சாப் என எங்கு கூப்பிட்டாலும் தான் வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார் என்று தனஞ்சயன் கூறியுள்ளார்.

https://twitter.com/CinemaWithAB/status/1748749709710409915?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1748749709710409915%7Ctwgr%5Ec59f819b5ddbc3ff0b03b223c13f04d3cc8cf533%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Freasons-behind-vikram-starrer-pa-ranjith-directorial-thangalaan-release-date-postponed-162921

தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.  இந்நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் நெருங்கியுள்ளதாகவும்,  தற்போது பின்னணி இசைக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் முழுமையாக பணிகள் முடிவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.