தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,462 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 161 பேர் மரணமடைந்துள்ளனர். குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,340 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 110 மரணமடைந்துள்ளனர். இதுவரை நாடுமுழுவதும் 1,47,88.109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 1,77,150 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,723 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 9,91,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 13,113 உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து இதுவரை 9,07,947 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் இதுவரை வரை 2,83,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,08,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழகத்தில் 2,0847,315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.







