தமிழ்நாட்டில் இன்றைய தினத்தில் 2,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்றைய நாளில் மட்டும் 49 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் தமிழத்தில் 2,913 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 25,16,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் இன்றைய தினத்தில் 3,321 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 24,49,873 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இன்றைய தினத்தில் கொரோனா தொற்றால் 49 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை 33,371 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது 32,767 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் கோவை (338), சென்னை (174), ஈரோடு (215) மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
Advertisement: