வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை கட்டாயம் : முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

புதுச்சேரி வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்களின் பதில்கள் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள், தங்களின் பல்வேறு கேள்விகளை அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி,

“திருநள்ளாரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கல்லூரி அமைப்பதற்கான பணி துவங்கப்படும்”. என தெரிவித்தார். மேலும், “புதுச்சேரியில் உள்ள
வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயர் பலைகையை கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும். அதேபோல் அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்” எனவும் சட்டப்பேரவையில் இருந்து உத்தரவு பிறத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.