தமிழ்நாடு சர்வதேச அலைச் சறுக்கு ஓபன் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று ஜப்பானின் டென்சி இவாமிமோ அசத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சர்வதேச அலைச் சறுக்கு ஓபன்
QS 3000 புள்ளிகளுக்கான போட்டிகள் கடந்த 14 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 11 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டிகள் ஓபன்
பிரிவில், ஆடவர் மற்றும் மகளிர் என இருவருக்கும் நடைபெற்றது.
இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் ஸ்வீடனின் கியான் மார்டின், ஜப்பானின்
டென்சி இவாமிமோ ஆகியோர் களம் கண்டனர். போட்டி நேர முடிவில் இரண்டு அலைகள் வீதம் 8.75, 7.55 ஆகிய புள்ளிகளை பதிவு செய்து, 16.30 புள்ளிகள் பெற்ற
ஜப்பானின் டென்சி இவாமிமோ, ஸ்வீடனின் கியான் மார்டினை ஐ விட 1.60 புள்ளிகள்
அதிகம் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து, சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்வீடனின்
கியான் மார்டின் இரண்டாம் இடம் பிடித்தார்.
இதன் மூலம் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஜப்பான் சாம்பியன்
பட்டம் வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக விளையாட்டு துறை கூடுதல்
செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் பரிசுகளை
வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு WSL QS 3000 கேடயங்கள் வழங்கப்பட்டன.







