திருவாரூர் மத்திய பல்கலை. | நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகளுக்கு மாணவர் சோ்க்கை தொடக்கம்!

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின்…

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத்தோ்வு இன்றி மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா்.  இந்த சமுதாயக் கல்லூரியில், மின்னிதழ் மற்றும் ஊடகவியல்,  வணிகவியல் தொழிற்கல்வி,  சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை ஆகிய இளநிலைப் படிப்புகளுக்கும்,  கல்வெட்டியல் மற்றும் பாரம்பரிய மேலாண்மை பட்டய படிப்புக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன.  இந்த  படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் சமுதாயக் கல்லூரியின் கட்டுப்பாட்டு அலுவலரையோ அல்லது இணையதளம் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.