முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலக கோப்பை; இலங்கை அணி அபார வெற்றி

டி 20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை  அணி 1 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் இன்று அயர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்களும், லோர்கன் டக்கர் 42 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். ஹசரங்கா, மகேஷ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்நது 129 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் மென்டிஸ், தனஞ்ஜெய டி சில்வா களமிறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மென்டிஸ் 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதி வரை நின்று அசத்தினார். டி சில்வா 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அசலங்கா மென்டிசுடன் கைகோர்த்து 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பரத், வாணி போஜன் காம்போ- த்ரில்லர் திரைப்படம்

Janani

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி

Vandhana

மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!

Halley Karthik