உயிரை மாய்த்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தோனி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்தாண்டு ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக போலீஸார் பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தை கௌரவிப்பதற்காக, ஆஸ்திரேலியாவில் ஒரு பெஞ்சுக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி அவரை நினைவு கூரும்விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சுஷாந்த் சிங் பெயர் பதிக்கப்பட்ட பெஞ்ச் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சுஷாந்த்சிங் ராஜ்புத், நடிகர், தீவிர வானியலாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், மனிதாபிமானி என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்வேதா சிங், “ சுஷாந்த் சிங் வாழ்கிறார். அவரது பெயர் வாழ்கிறது. இதுதான் தூய ஆன்மாவின் தாக்கம்! நீங்கள் கடவுளின் குழந்தை. என் குழந்தை. நீங்கள் எப்போதும் வாழ்வீர்கள்” என பதிவிட்டிருந்தார். இது சுஷாந்த் சிங் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram







