வைகை அணையின் உபரி நீர் வெளியேற்றம் -5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

வைகை அணையில் விவசாய பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு…

வைகை அணையில் விவசாய பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

அதன்படி, தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மூல வைகை ஆறு கொட்டக்குடியாறு முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வைகை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 70 50 அடைந்தது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இரவு 11. மணி முதல் காலை 5 மணி வரை வினாடிக்கு 4500 கன அடி மீதம் உபரி நீர் வெளியேற்றம் நீர்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.