#Suriya45 | ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ திரைப்படம்?

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வாடி வாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம்…

#Suriya45 | 'Suriya 45' movie directed by RJ Balaji?

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வாடி வாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடித்து கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக அமைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.