சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் பங்கமாக தயாராகி வரும் சூர்யா-44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் சூர்யாவின் நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர இவர்களுடன் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஹீரோவான சூர்யா சிறப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதன்படி சத்தமின்றி வெகுநாட்களாக சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.







