இணைய தொடரில் நாயகனாக அறிமுகமாகும் ‘சூரி’ – வெளியான அப்டேட்!

கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து இணைய தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக…

கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து இணைய தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம்  53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்றதுடன், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இதன் வாயிலாக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.

இந்த நிலையில், கொட்டுக்காளி திரைப்படத்திற்கு பிறகு சூரி கதையொன்றை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பின்னணியில் உருவாகும் இதனை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி இணையத் தொடராக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் பிரசாத் முருகேசன் இந்த தொடரை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளித் திரைக்கு பிறகு இணையத் தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாகும் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.