உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரியவகை உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக
எழுந்த புகாரின்பேரில், செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரை பணியிடைநீக்கம் செய்து ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வனத்துறை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்தும், எங்கிருந்து குரங்கை கடத்தினார்கள் என்பது குறித்தும் தொடர்ந்து வனத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா