டி 20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய அணி மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இப்போடிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த விதமாற்றமும் இல்லாத நிலையில் ஜிம்பாப்வே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி வெல்லிங்ஸாரப்டனுக்குப் பதிலாக ரிச்சர்ட் நகரவா ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விவரம் :
மேற்கிந்திய தீவுகள் : பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (C/WK), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட் (ரோஸ்டன் சேஸுக்குப் பதிலாக), மேத்யூ ஃபோர்டே, குடகேஷ் ஜோசப் மோட்டி, அகேல் ஹோஸ்.
ஜிம்பாப்வே : பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி (WK), டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (C), ரியான் பர்ல், டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், கிரேம் க்ரீமர், ரிச்சர்ட் நகரவா.







