நாளை வெளியாகிறது ‘ஸ்டார்’ திரைப்பட பாடல்!

நாளை டிசம்பர் 12ஆம் தேதி 12:12 மணிக்கு கவின் படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான நாளை கவின் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே…

நாளை டிசம்பர் 12ஆம் தேதி 12:12 மணிக்கு கவின் படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான நாளை கவின் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் நாளை 12:12 மணிக்கு கவின் நடித்த ஸ்டார் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கவின் நடிகராக நடித்துள்ளதை அடுத்து சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளின் போது இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பாடலின் சிங்கிள் வீடியோ நாளை வெளியாக இருப்பதை அடுத்து கவின் ரசிகர்கள் இந்த வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.