மக்களோடு மக்களாக என்றும் இருப்பவன் நான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடீசியா மைதானத்தில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும், சிலம்பக் கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் வருபவன் தான் அல்ல என்றும், மக்களோடு மக்களாக எப்போதும் இருப்பவன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழகம் வரும் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார், ஆனால் வந்து சென்றபிறகு பெட்டோல், எரிவாயு விலையைக் உயர்த்துவார் என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் நடக்கும் அரசு அராசங்கமே இல்லை என்றும், இது ஊழல் வாதிகளால் நடத்தப்படும் ஊழல் செய்யும் அரசு என்று குறிப்பிட்டார்.