முக்கியச் செய்திகள் சினிமா

நடிகை கொடுத்த மீ டு புகார்: ஆதாரமில்லாததால் விடுவிக்கப்படுகிறார் அர்ஜுன்!

நடிகை சுருதி ஹரிஹரன் கொடுத்த மீ டு புகாரில், ஆதாரமில்லை என்பதால் நடிகர் அர்ஜுன் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள் ளன.

தமிழில், நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ, அமெரிக்க மாப்பிள்ளை, வேதம் உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சுருதி ஹரிஹரன். இவர், நிபுணன் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் ’மீ டு’ புகார் பரபரப்பை ஏற்படுத்தியபோது, நடிகை சுருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது, மீ
டு புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் 2018 ஆம் வருடம் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுருதியின் புகாரை மறுத்த அர்ஜுன், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

சுருதி கொடுத்த புகாரில் அர்ஜுன் உட்பட அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகை களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த விசாரணையில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கப்பன்பார்க் போலீசார் தயாராகியுள்ளனர். அர்ஜுன் குற்றமற்றவர் என்று கூறி அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பெங்களூரில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

Halley Karthik

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி

Arivazhagan CM

இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்

Halley Karthik